\
TIME100 Next India 2026: 100 Rising Indian Influencers Named
Time 100Time

இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பேர்.. TIME வெளியிட்ட பட்டியல்!

நடிகை ஆலியா பட்-ன் புகைப்படம் இந்த இதழுக்கான முகப்பு படமாக வைக்கப்பட்டுள்ளது.
Published on: 

இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்க நிறுவனமனான டைம் (TIME) இதழ் வெளியிட்டுள்ளது.

டைம்100 நெக்ஸ்ட் இந்தியா 2026 (TIME100 Next India) என்ற பெயரில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், சினிமா, விளையாட்டு, இசை, தொழில்நுட்பம், அறிவியல், தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நடிகை ஆலியா பட்-ன் புகைப்படம் இந்த இதழுக்கான முகப்பு படமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகை நயன்தாரா மட்டுமின்றி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ராப் பாடகர் அறிவு, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் குறித்துப் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டுக் குறிப்பை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

விளையாட்டுத் துறையில் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோருக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும், இயக்குநர்கள் ஆர்யன் கான், பாயல் கபாடியா, பாடகர் தில்ஜித் தோசாஞ், விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட பலரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதேசமயம், இந்தப் பட்டியல் தரவரிசைப் பட்டியல் அல்ல. பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க 100 இந்தியர்களை அடையாளம் காணும் முயற்சியாகும். இதன் ஒரு பகுதியாக, டிசம்பர் 12ஆம் தேதி மும்பையில் TIME100 Next India விருது விழாவும் நடைபெறவுள்ளது.

TIME100 Next India 2026: 100 Rising Indian Influencers Named
இடைக்கால தேர்தல்; ரூ4000 கோடி செலவு.. முட்டாளாக உணர்கிறேன் - எலான் மஸ்க் வேதனை