3 உடல்கள் மீட்பு
3 உடல்கள் மீட்புpt desk

வயநாடு பகுதியில் தொடரும் மீட்புப் பணி: அழுகிய நிலையில் 3 உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சூஜிபாறை பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று உடல்களை மீட்கும் பணி தோல்வியடைந்த நிலையில் இன்று மீட்கப்பட்டள்ளது.
Published on

செய்தியாளர்: மகேஷ்வரன்

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 12-வது நாளாக இன்று மீட்பு பணிகள் தொடர்கிறது. நேற்று சூஜிபாறை பகுதியில் அழுகிய நிலையில் 3 உடல்கள் மற்றும் உடல் பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். அதனை மீட்டெடுப்பதற்கு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.

Ambulance
Ambulancept desk

ஆனால், உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை தூக்கி வரும் மீட்பு குழுவினருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை. இதனால் நேற்று அந்த உடகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதோடு, மீட்புக்காக சென்ற ஹெலிகாப்டர் திரும்பியது. இந்நிலையில், இன்று காலை மீண்டும் ஹெலிகாப்டர் அப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

3 உடல்கள் மீட்பு
சேலம்: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு

இதையடுத்து மீட்கப்பட்ட 3 உடல்கள் மற்றும் உடல் பாகங்களும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுக் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com