வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெப்பம் சுட்டெரிக்கும்.. வெப்ப அலையும் வீசும்; எச்சரிக்கும் இந்திய வானிலை!

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெப்பமானது அதிகளவில் இருக்கும் என IMD எச்சரித்துள்ளது.
வெப்பநிலை
வெப்பநிலை PT

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெப்பமானது அதிகளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக மே மாதத்தில் அதிகரிக்கும் வெப்பமானது இந்த ஆண்டு முன்னதாக அதிகரித்து காணப்படும் நிலையில், ஏப்ரல் மே மாதத்தில் வழக்கத்தை விட வெப்பநிலையானது கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) தெரிவித்துள்ளது.

இதைப்பற்றி கூடுதல் தகவலை பார்க்கலாம்.

சென்னையில் மட்டுமல்லாது இந்தியாவில் வெப்பத்தின் தாக்கமானது நாளாக நாளாக அதிகரித்து வருகிறது. வருடந்தோறும் ஏப்ரல், மே, மாதங்களில் 40 டிகிரிக்கு அதிகரிக்கும் வெப்பமானது இந்த வருடம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

வெப்பநிலை
"அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம்தான்" - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) தெரிவிக்கையில், “ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, வடக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வருடம் வெப்பத்தின் தாக்கம் கடுமையானதாக இருக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலகட்டங்களில் இப்பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளது.

மேலும், ”மத்தியப் பிரதேசம், வடக்கு மற்றும் கடலோர மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் பகல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.

ஏப்ரல் மாதம் வெப்ப அலைகள் கூடுதலாக 8 நாட்கள் வரை அதிகரித்து ஆந்திரா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளைப் தாக்கக்கூடும்.

கடலோர இந்தியா கிழக்கு மற்றும் தென் தீபகற்ப இந்திய பிராந்தியங்களில் பிப்ரவரி முதல் வறண்ட நிலை தொடர்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளிலும் வழக்கத்தை விட வெப்பநிலை இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும்” என்றும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com