“இந்த உப்மாவால் இவ்வளவு பிரச்னைகள் வரும்” - வைரலாகும் அதிர்ச்சி வீடியோக்கு Indigo-வின் பதில் என்ன?

“இண்டிகோ விமானத்தில் கொடுக்கப்படும் மேஜிக் உப்மா, போஹா மற்றும் தால் ஆகியவற்றில் மேகியை விட அதிகளவு சோடியம் உள்ளது. ஆம், இந்த உப்மாவில் 83% சோடியம் இருக்கிறது. இது பலருக்கு தெரியாது” - பயணி எச்சரிக்கை
Indigo food review
Indigo food reviewTwitter

கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் உணவு வைத்திருக்கும் பகுதியில் கரப்பான்பூச்சி ஒன்று ஓடியதை அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் விமானத்தில் கொடுக்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு இண்டிகோ தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.

Indigo food review
”என்ன ஒரே கரப்பான்பூச்சியா இருக்கு..” - பயணி பதிவிட்ட வீடியோ.. பதறி விளக்கம் கொடுத்த இண்டிகோ!

இச்செய்தி அடங்குவதற்குள் இண்டிகோ விமானத்தில் கொடுக்கப்படும் உப்மா குறித்து புகார் ஒன்றை மற்றொரு பயணி ஒருவர் தனது வலைதளப்பக்கத்தில் பதிந்துள்ளார். அது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன என்பதை பார்க்கலாம்....

Revant Himatsingka என்ற பயணி ஒருவர் தனது X பக்கத்தில் இண்டிகோ விமானத்தில் கொடுக்கப்படும் உணவு வகைகளைப்பற்றிய செய்தி ஒன்றை பதிந்துள்ளார். இவர் ஹெல்த் இன்ஃப்ளூயென்சர் (Food Pharmer என்றும் இவர் பிரபலம்). எளிமையாக சொன்னால் உடல்நலம் மற்றும் உணவு பற்றிய வீடியோக்களை பகிரும் இணைய பிரபலம். இன்ஸ்டாவில் சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்களையும், ட்விட்டரில் சுமார் 90,000 ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

இவர் தன் பதிவில், “மேகி அதிக சோடியம் நிறைந்த உணவு என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால் நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம், இண்டிகோ விமானத்தில் கொடுக்கப்படும் மேஜிக் உப்மா, போஹா மற்றும் தால் ஆகியவற்றில் மேகியை விட அதிகளவு சோடியம் உள்ளது. ஆம், இந்த உப்மாவில் 50% சோடியம் இருக்கிறது; போஹாவில் 83% சோடியம் இருக்கிறது. தால் உணவில் இன்னும் அதிகம் உள்ளது.

இண்டிகோ விமானத்தில் கொடுக்கப்படும் உப்புமா, போஹோ மற்றும் தால் சாவல் ஆகியவை ஆரோக்கியமான உணவாக அறியப்பட்டிருந்தாலும் அவை ஆரோக்கியமான உணவு அல்ல.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.... எந்தவொரு உணவு ஆரோக்கியம் என சொல்லிக்கொண்டு துரித உணவாக இருக்கிறதோ அதுதான் துரித உணவை காட்டிலும் ஆபத்தானது. இந்தியர்கள் ஏற்கெனவே சோடியம் அதிகம்தான் உட்கொள்கின்றனர். இப்படி மேலும் மேலும் சோடியம் உட்கொண்டால், நாள்படும்போது நம் ரத்த அழுத்தம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக பிரச்னைகள் வரலாம்

Indigo food review
உயர் ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தம் காரணம் என நினைக்கிறீர்களா? ஆனால்... -ஆய்வு முடிவுகள்

ஆகவே இண்டிகோ விமானத்தில் பயணப்படவேண்டும் என்றால் நீங்கள் வீட்டிலிருந்தே உணவை எடுத்துக்கொண்டு வாருங்கள் அல்லது விமானத்தில் முந்திரி, பாதாம் போன்றவற்றை வாங்கி சாப்பிடலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்த இண்டிகோ விமான நிர்வாகம், “இண்டிகோவில் வழங்கப்படும் உணவானது FSSAI விதிமுறைகளின்படி தயாரிக்கப்படுகிறது என்றாலும், அச்சேவையை இன்னும் மேம்படுத்த இதுபோன்ற பயணர்களின் கருத்துக்களை நாங்கள் மதிக்கிறோம். சில உணவுகள் இந்திய ரெசிபிக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளது.

இண்டிகோ விமானத்தில் கொடுக்கப்படும் சோடியம் அளவு
இண்டிகோ விமானத்தில் கொடுக்கப்படும் சோடியம் அளவு

இதற்குமுன் இதே இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு பரிமாறப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததை அடுத்து, பயணிகளுக்கு பாதுகாப்பற்ற உணவை வழங்கியதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு FSSAI நோட்டிஸ் ஒன்றை அனுப்பி இருந்தது. அதற்கு இண்டிகோ விமானம் மன்னிப்பும் கேட்டிருந்தது.

Indigo food review
கடைசிவரை வேலை செய்யாத ஏசி.. வியர்வையில் குளித்த பயணிகள்! இண்டிகோ விமானம் மீது குவிந்த புகார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com