உயர் ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தம் காரணம் என நினைக்கிறீர்களா? ஆனால்... -ஆய்வு முடிவுகள்

உயர் ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தம் காரணம் என நினைக்கிறீர்களா? ஆனால்... -ஆய்வு முடிவுகள்
உயர் ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தம் காரணம் என நினைக்கிறீர்களா? ஆனால்... -ஆய்வு முடிவுகள்

”என்னை டென்ஷன் ஆக்காதே! ப்லட் ப்ரஷ்ஷர் அதிகமாகுது” என பலரும் காலங்காலமாக சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், இதற்கு முற்றிலும் எதிரான கருத்தை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, உயர் ரத்த அழுத்தமானது, மற்ற பிரச்னைகளைவிட நரம்பியல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என கூறுகிறது. ரத்த ஓட்டமானது இதயத்துடிப்பை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும் என்பது நம் அனைவரும் நன்கு அறிந்ததே. ரத்த ஓட்டத்தின் வேகமானது உடனடியாக மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கும் அதிக அழுத்தத்தை கொடுக்கும். உயர் ரத்த அழுத்தமானது மூளை மற்றும் இதயத்துடன் தொடர்புடையது என்பது ஒருவருடைய ஆளுமை பண்புகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹைபர் டென்ஷன், நமது மனநிலை, இதயம் மற்றும் மூளையின் செயல்பாட்டின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால்தான் உயர் ரத்த அழுத்த நோயாளிகளை யோகா அல்லது பிராண பயிற்சி செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, தொடர் உடற்பயிற்சி, உப்பு உணவை குறைத்தல் போன்றவற்றை கடைபிடிக்குமாறும், இது நரம்பியல் பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும் எனவும் கூறுகின்றனர்.

உயர் ரத்த அழுத்தம் vs மன பதற்றம் - என்ன தொடர்பு?

உயர் ரத்த அழுத்தத்துக்கும், மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் இரண்டுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள். மேலும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது எனவும் கூறுகின்றன. இருப்பினும், ரத்தம் அழுத்தம் அதிகரிப்பதால் எதிர்மறை உணர்ச்சிகள் மேலோங்குகிறதா? அல்லது எதிர்மறை உணர்ச்சிகளால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா என்பதை கண்டறிவது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது.

இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஷாங்காய் ஜியாவோ டாங்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “நரம்பியல் பிரச்னை உடையவர்களுக்கு எளிதில் மன பதற்றம், கோபம், கவலை, எதிர்ப்புணர்வு, சுய உணர்வின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்ச்சிகள் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும். மன பதற்றம் மற்றும் மனநிலை மாற்றம் பிரச்னைகளுக்கு நரம்பியல்வாதம் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. நரம்பியல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி அதீத மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இது ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணித்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நரம்பியல்வாதம், மனநல பிரச்னைகள் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

ரத்த அழுத்தம் 140/90mmHg அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என குறிப்பிடப்படுகிறது. ஆராய்ச்சியாளர் டாக்டர் லே காய் கூறுகையில், ”மன அழுத்தம் மற்றும் மன பதற்றம் போன்ற உளவியல் பிரச்னைகள் முக்கிய நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மன பதற்றம், கோபம் மற்றும் மகிழ்ச்சி போன்றவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் என்பது இதயத்திற்கும் மூளைக்குமான இணைப்பு என்கிறது உளவியல் மருத்துவம். இது ஆளுமை பண்புகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்கிறார்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உணவுமுறையில் செய்யவேண்டிய மாற்றங்கள்:

DASH டயட் என்றால் என்ன?

Dietary Approaches to Stop Hypertension - உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்தும் உணவு முறைகள் பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகிறது. சுலபமான மற்றும் சமச்சீரான உணவுகளை எடுத்துக்கொள்வது இதயத்தை ஆரோக்கியமான வைக்கிறது.

1. பழங்கள்
2. காய்கறிகள்
3. முழு தானியங்கள்
4. பீன்ஸ்
5. நட்ஸ்
6. விதைகள்
7. மெலிந்த புரதங்கள்
8. குறைந்த கொழுப்புகள்
9. செறிவூட்டப்படாத கொழுப்பு எண்ணெய்கள்

அதே சமயம் இந்த உணவுகளே சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்டவைகளாக இருக்கக்கூடாது. அதேபோல், இந்த டயட் உணவுகளில் உப்பு குறைக்கப்படுவதும் நல்ல பலனை தரும். DASH டயட்டை பொருத்தவரை கால்சியம், நார்ச்சத்து, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் இருக்கும். மேலும் இந்த உணவுகள் உடலில் ரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com