பலகோடி இதயங்களை வென்ற நியூசி. இளம் பெண் எம்.பி; மாவோரி மக்களின் 800ஆண்டு வரலாறுசொல்லும் கண்ணீர் கதை!

நியூசிலாந்தின் மாவோரி பழங்குடியினரின் பாரம்பரிய நடனமான "ஹக்கா" நடனத்துடன் சேர்ந்து கை மற்றும் உடலை அசைத்துப் பேசி நாடாளுமன்றத்தையே அதிரவைத்த இளம் பெண் எம்.பி மைபி-கிளார்க் யார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு!
மைபி-கிளார்க்,
மைபி-கிளார்க், PT WEP

மாவோரி மக்கள் வரலாறு

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு தான் நியூசிலாந்து. நியூசிலாந்தில் ”மாவோரி ” என்ற பெயர் புகழ்பெற்றதாகும். இந்த வார்த்தைக்கு "நீளமான வெண்ணிற முகில் நிலம்" என்று பொருள் உண்டு. மனிதர்கள் கடைசியாகக் குடியேறிய நாடுகளில் ஒன்று நியூசிலாந்து எனக் கூறப்படுகிறது .

மாவோரி மூதாதையர்கள் தான் நியூசிலாந்தில் முதல் முதலில் குடியேறியவர்கள். பொலினீசியாவிலிருந்து கி.பி 1200 முதல் 1300 காலப்பகுதியில் அங்குக் குடியேறியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கிபி 1250-1300 ஆண்டுகளில் பொலினீசியர்கள் நியூசிலாந்தில் குடியேறி தனித்துவம் மிக்க "மாவோரி" என்ற கலாச்சாரத்தைப் பின்பற்றி வந்துள்ளனர்.

மாவோரி
மாவோரி

வைடாங்கி ஒப்பந்தம்

127 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்திற்கு, ஆங்கிலேயர் கேப்டன் ஜேம்ஸ் குக் 1769 இல் இங்கு வந்தார். 1830களில், நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைக்கவும், நியூசிலாந்தில் ஒரு சாத்தியமான காலனியாதிக்கத்தை நிலை நாட்ட விரும்பினார். பிரெஞ்சுக்காரர்களுக்கு முன்பு இங்குக் குடியேற பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மேலிடம் அழுத்தம் கொடுத்தது. இதனால் ஆங்கிலேயர்கள் இங்குக் குடி பெயர்ந்துள்ளனர்.

இங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த "மாவோரி” இன மக்களின் கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள் பாதிக்கப்படாமல் நியூசிலாந்தை ஒரு ஆங்கிலேய காலனியாக வைத்திருக்க ”வைடாங்கி” ஒப்பந்தம் கையெழுத்தானது.

மைபி-கிளார்க்,
”பிரதமரின் மவுன விரதத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்” - அவையை அதிரவைத்த அசாம் எம்.பி. கோகோய்!

1840 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 தேதி வைடாங்கியில், நியூசிலாந்தின் முதல் ஆளுநராக இருந்த வில்லியம் ஹாப்சன் என்பவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக மாவேரி தலைவர்களை அழைத்தார். இந்த ஒப்பந்தம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு உள்ளூர் தலைவர்களால் கையெழுத்திடப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இது தான் தற்போது "வைடாங்கி ஒப்பந்தம்" என அழைக்கப்படுகிறது.

இன்று நியூசிலாந்தில் உள்ள 4.5 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய வம்சா வழியினர். ஆனால், நியூசிலாந்தைத் தாயகமாகக் கொண்ட "மாவோரி இன மக்கள் மிகப்பெரிய சிறுபான்மையினராக உள்ளனர். இதனால் நியூசிலாந்தின் கலாச்சாரம் மாவோரி மற்றும் ஆரம்பக் கால ஐரோப்பிய கலாச்சாரங்களை கடைப்பிடித்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக் காலத்தில் உலகின் வேறு பகுதிகளிலிருந்து இங்குக் குடியேற்றம் தொடங்கியதில் இருந்து பல்வேறு கலாச்சாரம் பரவ தொடங்கியது.

மாவோரி மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையேயான ஆரம்பக்கால தொடர்பு என்பது 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, வர்த்தகம் முதல் கொடிய வன்முறைச் சம்பவங்கள் வரை நீடித்து இருந்தது. ஐரோப்பாவில் இருந்து குடிபெயர்த்தவர்களுக்கும், மாவோரி இனமக்களுக்கும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான மாவோரியர்கள் கொல்லப்பட்டனர்.

மாவோரி மக்கள் புதியவர்களிடமிருந்து பல தொழில்நுட்பங்களைத் தீவிரமாக கற்றுக் கொண்டனர். 1840 ஆம் ஆண்டு " வைதாங்கி" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இரண்டு கலாச்சாரங்களும் ஒன்றாக இருந்தன. ஆனால் சர்ச்சைக்குரிய நில விற்பனையில் அதிகரித்த பதட்டங்கள் 1860 ஆம் ஆண்டுகளில் மீண்டும் மோதலுக்கு வழிவகுத்தன. 1877 இல் " வைதாங்கி "ஒப்பந்தம் செல்லாது அறிவிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் ஐரோப்பிய கலாச்சாரத்தை கடைபிடிக்கும் நிலைக்கு "மாவோரியர்கள்" தள்ளபட்டனர். மாவோரி இன மக்களை அழிக்க ஒரு பெரும் கூட்டமே திறந்து வந்த போது அவர்களை எதிர்த்து போராடியவர் மைபி-கிளார்க் தாத்தா “வயர்மு கட்டேனே”. பின்னர் அங்கு கொடிய தொற்று நோய் பரவத்தொடங்கியது இதனால் "மாவோரி மக்கள் பல பேர் உயிரை விட்டனர்.

கடந்த 2022 ஆண்டு நிலவரப்படி, 50% மாவோரி மக்கள் தங்களை மதம் அல்லாதவர்களாக அறிவித்து கொண்டு வாழந்து வருகின்றனர். ஒரு சிலர் வேறு மதங்களையும், ஒரு சிலர் கிறிஸ்தவ மதங்களையும் கடைபிடித்து பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஜூன் 2023 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி நியூசிலாந்தில் "மாவோரி இன மக்கள்" மொத்த மக்கள் தொகையில் 17.3% உள்ளனர்.

மைபி-கிளார்க் பள்ளி வாழ்க்கை

மைபி-கிளார்க், ஹன்ட்லியில் உள்ள ராகௌமங்கமங்காவில் பள்ளிப் படிப்பை முடித்தார். தன்னுடைய 17 வயதில், "மரமடகாவைப் பற்றி மஹினா” என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர், "மாதரிக்கியைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது அதில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 2023 இல், நியூசிலாந்து வாரியர்ஸுக்கு "மரமடகா மற்றும் மாதரிக்கி" பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தார்.

மைபி-கிளார்க்,
‘மெல்ல விடை கொடு விடை கொடு மனமே...’ - வானத்தில் பறந்த காவலருக்கு பிரியாவிடை...

கடந்த செப்டம்பர் 2022 இல், மைபி-கிளார்க் பாராளுமன்ற கட்டிடத்தின் எதிரே உரை நிகழ்த்தினார் . இவரின் உரையைக் கேட்டு அசந்து போன பல அரசியல் கட்சி தலைவர்கள் மைபி-கிளார்க்கை சந்தித்து தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து மைபி-கிளார்க் மற்றும் அவரது தந்தை, இருவரும் நியூசிலாந்து நாடாளுமன்ற மாவோரி மக்கள் வாக்காளர் தொகுதியான "ஹவுராக்கி-வைகாடோ" தொகுதி வேட்பாளர்களாக ”தே பதி” மாவோரி கட்சியின் பரிசீலனையில் இருந்தனர். இறுதியில் 2023 நடந்த தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மைபி-கிளார். 21 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஜேம்ஸ் ஸ்டூவர்ட்-வொர்ட்லிக்குப் பிறகு, நியூசிலாந்தின் இளைய எம்.பி. என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தை அதிர வைத்த சம்பவம்!

நியூசிலாந்தின் மாவோரி பழங்குடியினரின் பாரம்பரிய நடனமான ஹக்கா நடனம் மற்றும் பாடலுடன் சேர்ந்து கை மற்றும் உடலை அசைத்துப் பேசியது, நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது என்றுதான் சொல்லவேண்டும்.

சிறுவயதில் இருந்தே அடக்குமுறைகளைச் சந்தித்து வந்த மாவோரி இனத்தைச் சேர்ந்த மைபி-கிளார்க், மாவோரி மக்களின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் இது தான் என உறுதியாக இருந்த அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை இணையத்தைக் கலக்கி வந்தது.

அந்த வீடியோவில், "என்னுடைய இந்த முதல் உரையை என்னுடைய மூதாதையர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். என் தாத்தா பாட்டிகளுக்கு அர்ப்பணிக்கிறேன். எங்கள் எல்லா குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்பாக என்னிடம் நாடாளுமன்றத்தில் பேசப்படும் விவகாரங்களைத் தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுரைகள் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற அவையில் பேசப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. அனைத்திலும் அரசியல் உள்ளது. வாழ்நாள் முழுவதும் பள்ளி வகுப்பறையின் பின்புறத்தில் காத்திருக்கும் தாமரிக்கி மாவோரி இன மக்கள் , வக்காமா, தலைமுறைகள் தங்கள் தாய்மொழியைக் கற்க வேண்டும் என ஏங்கிக் காத்துக்கொண்டுள்ளனர்" என்றார்.

மைபி-கிளார்க் நாடாளுன்ற உரை வைரலாக முக்கிய காரணமாக இருந்தது இந்த சம்பவம் தான்,

நியூசிலாந்தின் மாவோரி பழங்குடியினரின் ஆதிகால பாரம்பரிய நடனங்களில் ஒன்றான ஹக்கா நடனத்துடன் சேர்த்து முகபாவனைகள், உடலை அசைத்துப் பேசிய பேச்சு நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மைபி-கிளார்க், தாத்தா வயர்மு கட்டேனே கடந்த 1872-ம் ஆண்டு மாவோரி இனத்தின் முதன் அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைபி-கிளார்க்,
வங்கதேச பாராளுமன்ற தேர்தல்: தொடர்ந்து 4 வது முறையாக ஆட்சியை பிடித்த அவாமி லீக் கட்சி!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com