இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சம்! 'Exit Polls' குறித்து முதலீட்டாளர்கள் நினைப்பதென்ன?

தேர்தல் முடிவின் கருத்துக்கணிப்பின்படி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுவதால், இன்று தொடக்கமே பங்குசந்தைகள் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றன.
மும்பை பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தை PT

தேர்தல் முடிவின் கருத்துக்கணிப்பின்படி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுவதால், இன்று தொடக்கமே பங்குசந்தைகள் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றன. அதன்படி தேசிய பங்குச்சந்தை நிப்டி 600 புள்ளிகளும், மும்பை பங்குச்சந்தை சென்செஸ் 2000 புள்ளிகளும் அதிகரித்து வர்த்தகமானது நடைபெற்று வந்தது.

இன்றைய பங்கு சந்தையின் முடிவில் புதிய உச்சத்தில் புள்ளிகளைத் தொட்ட பங்கு சந்தையானது , நிஃப்டி 733 புள்ளிகள் மற்றும் சென்செஸ் 2507 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் வர்த்தகம் இன்று விறுவிறுப்பு அடைந்திருந்தது.

பங்கு சந்தை
பங்கு சந்தை புதிய தலைமுறை

தேர்தல் முடிவு கருத்து கணிப்பின்படி மீண்டும் மத்தியில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டதால் அதன் கொள்கையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என்று பங்கு சந்தைகளை சேர்ந்தவர்கள் நம்பியதால், அரசுடைமை நிறுவனங்களின் பங்குகளில் விலை விறுவிறு என்று உயர்ந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com