\
The Important Reasons Prashant Kishor Win Bihar Election
prashant kishorPTI

பாஜகவுக்குப் பெரிய அடி.. பிரசாந்த் கிஷோர் போட்ட பிளான்.. பீகாரில் சாதித்தது எப்படி?

10 முறை முதல்வர் நிதிஷ் குமார் பீகாரில் தீவிர அரசியலில் இருந்து நகர்ந்தபின் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே அவரது தரப்பு தோற்றுள்ளதும் கவனம் பெறுகிறது. இம்முடிவு, பீகார் அரசியலின் கணக்குகளை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Published on

பீகாரில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதுதான் இந்தியாவின் தற்போதைய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸும் குஜராத்தில் பாஜகவும் வெற்றிபெற்ற நிலையில், பீகாரில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இந்தியாவில் அரசியல் முக்கியத்துவமிக்க மாநிலங்களில் ஒன்றான பீகாரில், பிரசாந்த் கிஷோரின் கைஓங்குகிறதா என்ற கேள்வியை பங்கிபூர் தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ளன. இத்தொகுதி பாட்னா மேற்கு என்ற பெயரில் இருந்தபோதும் பின்னர் பங்கிபூர் என பெயர் மாற்றம் கண்டபின்னரும் தொடர்ந்து 9 முறை பாஜக வென்றுள்ளது.

prashant kishor
prashant kishorPTI

இதில் பாஜகவின் தேசியத் தலைவரான நிதின் நபினின் மறைந்த தந்தை 4 முறையும் நிதின்நபின் 5 முறையும் வெற்றிபெற்றுள்ளனர். இத்தகைய வரலாற்றுமிக்க பாஜகவின் கோட்டையில்தான் இன்று பிரசாந்த் கிஷோர் பெரிய வெற்றியை, அதுவும் தாம் களம் கண்ட முதல் தேர்தலிலேயே பதிவு செய்துள்ளார். மேலும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பீகார் முதல்வராக எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே அக்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.10 முறை முதல்வர் நிதிஷ் குமார் பீகாரில் தீவிர அரசியலில் இருந்து நகர்ந்தபின் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே அவரது தரப்பு தோற்றுள்ளதும் கவனம் பெறுகிறது. இம்முடிவு, பீகார் அரசியலின் கணக்குகளை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

The Important Reasons Prashant Kishor Win Bihar Election
பாஜகவின் கோட்டை பாங்கிப்பூர்.. இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி.. ஜன் சுராஜின் முக்கிய நகர்வு!

மாணவர் போராட்டம் டெல்லிக்குஅடுத்து பாட்னாவில்தான் தீவிமாக இருந்த நிலையில் அதுவும் தேர்தல் முடிவில் தாக்கம் ஏற்படுத்தியதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தனது வெற்றி பாஜகவுக்கு விடப்பட்ட பெரிய செய்தி என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதும் இத்தருணத்தில் கவனம் பெறுகிறது. அதேநேரத்தில், இதன் பின்னணியில் வலுவான காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், பாஜகவின் நீரஜ்குமார் சின்ஹாவைவிட, பிரஷாந்த் கிஷோர் வலுவான வேட்பாளராக இருந்தது முதல் காரணமாகக் கருதப்படுகிறது.

prashant kishor
prashant kishorPTI

பாஜகவின் கோட்டையான பங்கிப்பூர் தொகுதியில் மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கலாம் என கருதப்படும் நிலையில், அத்தொகுதி வாக்காளர்கள், பிரஷாந்த் கிஷோர் பிறரைவிட சிறந்த வேட்பாளர் என எண்ணியுள்ளனர். மேலும், தமது பரப்புரையில் பிரசாந்த் கிஷோர் வழக்கமான சாதி, மத விவகாரங்களுக்கு அப்பாற்பட்டு, கல்வி, வேலைவாய்ப்ப்பு சார்ந்த பிரச்னைகளைக் கையிலெடுத்தார். உள்ளூர் அளவிலான பரப்புரைக் கூட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததோடு, பாஜகவில் உள்ளூர் அளவில் நிலவிய உட்கட்சிப் பூசல்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதும், அவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளது.

The Important Reasons Prashant Kishor Win Bihar Election
பிஹார் இடைத்தேர்தல்| பாஜக கோட்டையை உடைத்த பிரசாந்த் கிஷோர்! பங்கிப்பூர் தொகுதியில் வரலாற்று வெற்றி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com