\
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்web

பிஹார் இடைத்தேர்தல்| பாஜக கோட்டையை உடைத்த பிரசாந்த் கிஷோர்! பங்கிப்பூர் தொகுதியில் வரலாற்று வெற்றி!

பிஹார் இடைத்தேர்தலில் பாஜக செயல் தலைவர் நிதின் நபீனின் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.
Published on
Summary

பீகார் பங்கிபூர் இடைத்தேர்தலில், பாஜக கோட்டையாக கருதப்பட்ட தொகுதியில் ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் அதிரடி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா, ஆர்ஜேடி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி, 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 64,151 வாக்குகள் பெற்று பாஜக ஆதிக்கத்தை சிதைத்துள்ளார். இந்த முடிவு பீகார் அரசியலில் புதிய சமநிலையை உருவாக்கும் என பார்க்கப்படுகிறது.

பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த வாரம் ஜூலை 30 அன்று இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தசூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட நிலையில் பீகார் மாநிலத்தில், பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் பங்கிபூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா, ஆர்ஜேடி (RJD) மற்றும் ஜன் சுராஜ் பிரசாந்த் கிஷோர் இடையே பலத்த போட்டி நிலவியது. தொடக்கத்தில் பாஜக முன்னிலைபெற்ற நிலையில், இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 19ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் வெற்றியை பதிவுசெய்து பாஜகவின் கோட்டையை தகர்த்தார். தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, அவர் மொத்தம் 64,151 வாக்குகளைப் பதிவு செய்தார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பங்கிபூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் நிதின் நவின், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்தத் தொகுதியில் நிதின் நிவின் 5 முறை வென்றிருந்தார். நிதின் மற்றும் அவரின் தந்தை வசம் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பங்கிப்பூர் தொகுதியை, தங்களுடைய கோட்டையை பாஜக அதிர்ச்சியளிக்கும் வகையில் இழந்துள்ளது. கடந்த 2025-ல் 52,000 ஓட்டுகளின் வித்தியாசத்தில் நிதின் நபின் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் கிஷோர்
2026 காமன்வெல்த்தில் பின்தங்கிய இந்தியா.. 1998-க்கு பின் மோசமான பதிவு.!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com