உத்தராகண்ட்: பனிச்சரிவில் சிக்கி இறந்த 4 கடற்படை வீரர்கள் உடல் மீட்பு

உத்தராகண்ட்: பனிச்சரிவில் சிக்கி இறந்த 4 கடற்படை வீரர்கள் உடல் மீட்பு

உத்தராகண்ட்: பனிச்சரிவில் சிக்கி இறந்த 4 கடற்படை வீரர்கள் உடல் மீட்பு
Published on
இமயமலையில் பனிச்சரிவில் சிக்கி இறந்த 4 கடற்படை வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்தில் இமய மலைத்தொடரில் மலையேற்றத்தில் கடற்படை வீரர்கள் நால்வர் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ சுமை தூக்கும் பணியாளர் ஒருவரும் சென்றார். திரிசூல சிகர பகுதியில் செல்லும் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி அவர்கள் ஐவரும் இறந்தனர். அதில் நால்வரின் உடல்கள் சிறப்பு படையினரின் நீண்ட தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com