[X] Close

பெங்களூர்: கொரோனாவால் இறந்த கணவர் - ஒரு வருடம் கழித்து 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை

இந்தியா

Bangalore-based-woman-suicide-along-with-her-children-after-the-death-of-her-husband

பெங்களூரு அருகே நெலமங்கலா பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

நெலமங்கா பகுதியை சேர்ந்த அந்தக் குடும்பத்தலைவர், பிரசன்னகுமார். இவர் கடந்த ஒரு வருடம் முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறுதியில் உயிரிழந்திருந்தார். அவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் அந்த துக்கத்தில் இருந்த மீளமுடியாமல் தவித்த அவரின் மனைவி வசந்தா (வயது 41) தன் குழந்தைகளான எசவந்த் (15) மற்றும் மகள் நிக்சிதா(6) ஆகியோரை இணைத்துக்கொண்டு, நேற்று இரவு தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்.

image


Advertisement

தாய் வசந்தாவும், மகள் நிக்சிதாவும் ஓர் அறையிலும், மகன் மற்றொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் மாத நாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு நெலமங்கலா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி: தற்கொலை எப்படி தீர்வாகும்? - மனநல ஆலோசகர்களின் விளக்கங்களும் தீர்வுகளும்!

போலீசார் விசாரணையில், கடந்த வருடம் கணவர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்டு இருந்த இந்த குடும்பத்தினர் தற்போது அதுபற்றி இரண்டு பக்க தற்கொலை கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அக்கடிதத்தில் வசந்தா “நாங்கள் வீட்டுக்காக வாங்கிய கடன் ஓரளவு அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மீதமுள்ள கடன் தொகையை இந்த வீட்டை விற்பனை செய்து எடுத்துக்கொள்ளுங்கள். கடனை அடைத்துவிட்டு மீதமுள்ள தொகையை, அனாதை ஆசிரமத்திற்கு வழங்கிடவும்” என எழுதியுள்ளார். மாத நாயக்கனஹள்ளி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


Advertisement

Advertisement
[X] Close