\
4 terrorist dead in kashmir
4 terrorist dead in kashmirfile photo

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு.. தீவிரவாத அமைப்பு தளபதி உட்பட 4 பேர் மரணம்!

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தனர்.
Published on: 
Summary

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிலக்கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர். இதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி உட்பட 4 பேர் பலியாகினர். பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு எல்லையில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் பலி நிலக்கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த நான்கு தீவிரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா தளபதி என உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். ஜம்மு பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது நிலக்கண்ணி வெடியில் சிக்கினர். ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி உட்பட 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிலக்கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர்.

கிருஷ்ணா காட்டி பகுதியில் ஊடுருவல் முயற்சி நடைபெற்றதாக ஆரம்ப கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா காட்டி மண்டலத்தில் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர்.

சத்வால்-நாகி பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே பயங்கரவாதிகள் குழு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது. அப்போது எல்லையில் வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடியில் அவர்கள் சிக்கினர். இதில் 4 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் உளவுத்துறையின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நான்கு பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம், ஹஜிரா தாலுகா, மண்டலா மற்றும் மாதர்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு நபர்களில் முகமது பைசான் என அழைக்கப்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி என உளவுத்துறை தகவலில் தெரியவந்துள்ளது. முகமது இஷ்டாக், முகமது வாகாஸ் மற்றும் முகமது ஆசிம் உயிரிழந்த பிற மூன்று நபர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிருஷ்ணா காட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

4 terrorist dead in kashmir
இனி இந்தியா இல்லை.. எல்லாமே சீனாதான்.. கைகோத்த வங்கதேசம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com