தெலங்கானா: முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு

தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.
ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டிtwitter

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரமைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற மிசோரம் வாக்கு எண்ணிக்கையில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது.

எனினும் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில், புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில், வசுந்தரா ராஜே, தியா குமாரி மற்றும் பாபா பாலக்நாத் ஆகிய 3 பேரில் ஒருவர் முதலமைச்சராவார் என்று கூறப்படுகிறது. சத்தீஸ்கரில், மூத்த தலைவர் ராமன் சிங், முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார். இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், ஐந்தாவது முறையாக மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிசோரமில், ஜோரம் மக்கள் இயக்கம் தலைவர் லால்துஹோமா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வர் என்ற பெருமையை ரேவந்த் ரெட்டி பெற்றுள்ளார்.

ரேவந்த் ரெட்டி
யார் இந்த ரேவந்த் ரெட்டி?

தெலங்கானா துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவியேற்றுக்கொண்டார். ரேவந்த் ரெட்டியுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். தலைநகா் ஹைதராபாதில் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தெலங்கானாவின் 3வது சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. 119 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, இறுதியாக காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சி முதன்முறையாக தெலங்கானாவில் ஆட்சியமைத்து உள்ளது.

இதையும் படிக்க: ”வடகொரிய பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்”- மேடையில் கண்ணீர்விட்டு அழுத கிம் ஜாங் உன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com