தெலங்கானா
தெலங்கானா முகநூல்

தெலங்கானா ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து! 42 ஐ தாண்டும் இறப்பு எண்ணிக்கை!

தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி 42 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Published on

தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் நேற்று காலை 143 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆலையில் இருந்த ரியாக்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், தொழிலாளர்கள் சிலர் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாக அங்கு நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித்தனர்.

உடனடியாக தீப்பிழம்புகள் கிளம்பி, தொழிற்சாலையின் சில பகுதிகளை சூழ்ந்தன. ஆலை முழுவதும் கரும்புகை வெளியேறி வருகின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி 36 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 42 ஐ தாண்டிள்ளது.

இந்நிலையில், பாசமிலரம் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய தொழிலாளர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது விபத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தெலங்கானா
கர்நாடகா | மீண்டும் முதல்வர் யுத்தம்.. போர்க்கொடி தூக்கும் 100 காங். எம்.எல்.ஏக்கள்!

” தெலுங்கானாவின் சங்கரெட்டியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com