\
உயிரிழந்த கணவன்- மனைவி
உயிரிழந்த கணவன்- மனைவிfile image

தெலங்கானா: மனைவி, 2 குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட அரசு அதிகாரி-பின்னணி என்ன?

தெலங்கானாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளைச் சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தெலுங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலராக (AR constable) பணிபுரிந்து வந்தவர் அகுலா நரேஷ் (35). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவர் வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

உயிரிழந்த பள்ளி குழந்தைகள்
உயிரிழந்த பள்ளி குழந்தைகள்

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த கணவன்- மனைவி
போலி பாஸ்போர்ட் மூலம் 3 நாடுகளுக்கு பயணம் - குஜராத் இளைஞர் கைது

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் இந்த முடிவை அகுலா நரேஷ் எடுத்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

தனது மனைவி மற்றும் குழந்தைகளைச் சுட்டுக் கொன்று விட்டு தன்னுடைய உயிரையும் அரசு ஊழியராக இருந்த ஒருவர் மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கணவன்- மனைவி
வேலூர் | கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசுவின் உடல்... நல்லடக்கம் செய்த காவலர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com