வேலூர் | கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசுவின் உடல்... நல்லடக்கம் செய்த காவலர்!

கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு உடல்.. முறைப்படி சுடுகாட்டில் அடக்கம் செய்த தலைமைக்காவலர்.. எங்கு நடந்தது? முழுமையாக பார்க்கலாம்..
உடலை அடக்கம் செய்த காவலர்
உடலை அடக்கம் செய்த காவலர்புதியதலைமுறை

செய்தியாளர் - குமரவேல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் பகுதியில் அரசு மருத்துவமனை பின்புறத்தில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் இருந்து, பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு சடலமாக நேற்று மீட்கப்பட்டது. தொடர்ந்து, மீட்கப்பட்ட பெண் சிசு உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விவகாரம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசுவின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் கேசவன், பெண் காவலர் பிரியா உதவியுடன் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார். அங்கு முறைபடி சடங்குகள் செய்து சிசுவிற்கு காவலர்கள் இறுதிச் சடங்கு செய்தனர். தனது சொந்த செலவில் பெண் சிசுவின் உடலை அடக்கம் செய்துள்ளார் தலைமை காவலர் கேசவன்.

உடலை அடக்கம் செய்த காவலர்
திருவாரூர் - அரசுப்பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய அரசு கல்லூரி மாணவர்கள் நால்வர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com