sathish kumar, tejashwi
sathish kumar, tejashwi pt web

பீகார் தேர்தல் | தேஜஸ்வி யாதவ் பின்னடைவு.. கடும் போட்டியாக மாறிய பாஜக வேட்பாளர்! | Bihar

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மகா கட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தான் போட்டியிட்ட ராகோபூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
Published on
Summary

மகா கட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், ராகோபூர் தொகுதியில் 1,273 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி மகா கட்பந்தன் கூட்டணியை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி, 190 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், 50 இடங்களில் மகா கட்பந்தன் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன. குறிப்பாக, 143 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 35 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இவ்வாறு, மகா கட்பந்தன் கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், மகா கட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வியாதவ்வும் தான் போட்டியிட்ட ராகோபூர் தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து தொடர்ந்து, முன்னிலையில் இருந்து வந்த தேஜஸ்வியாதவ் தற்போது, 1,273 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதிஷ்குமார் யாதவ் 12,230 வாக்குகளும், தேஜஸ்வி யாதவ் 10,957 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதன்படி, தேஜஸ்வி யாதவ் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.

sathish kumar, tejashwi
பீகார் தேர்தலில் இண்டியா கூட்டணி பின்னடைவை சந்திப்பதற்கு இதுவா காரணம்? | Bihar Election Result

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com