இந்தியா
கத்தார் இந்தியர்கள் நிலைமை: சுஷ்மா சுவராஜ் டிவிட்
கத்தார் இந்தியர்கள் நிலைமை: சுஷ்மா சுவராஜ் டிவிட்
கத்தாரில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும், யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் வசிக்கும் இந்தியர்களின் நிலை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், கத்தாரில் வசித்து வரும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும், இந்தியர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் இருப்பது உறுதி செய்யப்படும், இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருந்துகிறோம். எனவே யாரும் கவலையடைய வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
தீவிரவாத அமைப்பினருக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி கத்தாருடன் சவுதி அரேபியா உள்ளிட்ட கூட்டணி நாடுகள் தங்களது தூதரக உறவை முறித்து கொள்வதாக அறிவித்ததுடன், அந்நாட்டுடனான போக்குவரத்தையும் தடை செய்தன.