\
Supreme Court Slams Cancer Drug Prices
supreme courtANI

ரூ.2,700 மருந்து ரூ.27,000-க்கா? உச்ச நீதிமன்றம் கடும் அதிர்ச்சி!

அத்தியாவசிய புற்றுநோய் மருந்து விலை உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on

செய்தியாளர் - M. மீரா

அத்தியாவசிய புற்றுநோய் மருந்து ஒன்றின் விலை, சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் விலையைவிட 10 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தவும், மருந்து நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் அதிகப்படியான லாபத்தைத் தடுக்கவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும், மற்றுமொரு மனுவில் மருத்துவர்கள் பொதுப் பெயரில் உள்ள (generic) மருந்துகளை பரிந்துரைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

Model image
Model imageANI

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன்பு, மருந்துகள் தொடர்பான இந்த இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ரூ.2,700-க்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ஓர் அத்தியாவசிய புற்றுநோய் மருந்தின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.27,000 என அச்சிடப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், இது மிரட்டி பணம் பறிப்பது இல்லையென்றால் வேறு என்ன? என கேள்வி எழுப்பினர். மேலும், புற்றுநோய் சிகிச்சைக்காக மக்கள் வீடுகளையும் நகைகளையும் விற்கும் நிலையில், இத்தகைய விலை நிர்ணயம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தனர். மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இதுபோன்ற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த நிலைமை நோயாளிகளுக்கு எதிரான பட்டப்பகலில் நடக்கும் கொள்ளை என்றும் நீதிபதிகள் கடுமையாகக் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Supreme Court Slams Cancer Drug Prices
உத்தரப் பிரதேசம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படுமா? மாயாவதி நினைத்தபோது நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com