‘தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக ஆராய குழு’ - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக குழு அமைக்க உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Supreme Court
Supreme Courtpt desk

தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை விசாரணை நடைபெற்ற போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தாவிடம் உச்ச நீதிமன்றம், “தன்பாலினத்தவர்கள் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய உரிமைகள் வழங்கலாம்” என அறிவுறுத்தியது.

Homosexuals
Homosexuals pt desk

குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் இணைந்து கூட்டு வங்கி கணக்குகளை தொடங்க அனுமதி வழங்குவது, ஆயுள் காப்பீட்டு கொள்கைகளில் வாழ்க்கை துணையை பங்குதாரராக ஒருவரை மற்றொருவர் இணைப்பது உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளில் அனுமதி வழங்குவது போன்றவை குறித்து மத்திய அரசிடம் கேட்டு தகவல் தெரிவிக்கும்படி குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, தன் பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாகவும் ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வது தொடர்பாகவும் குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நீதிபதி “இந்த விவகாரம் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகங்களை உள்ளடக்கியது என்பதால் மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளது. அதில், வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களும் தங்களுடைய கருத்துகள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

same sex marriage
same sex marriagept desk

முன்னதாக ‘இத்தகைய தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது; அது நாடாளுமன்றத்திற்கு இருக்கக்கூடிய அதிகாரம்’ என மத்திய அரசு தரத்தில் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com