supreme court rejects plea to register fir yashwant varma
யஷ்வந்த் வர்மாx page

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்|வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Published on

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில், கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு அவரை மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில், நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல் நிலையம் வழக்குப்பதிவு (FIR) செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

supreme court rejects plea to register fir yashwant varma
உச்ச நீதிமன்றம்கூகுள்

இந்த மனு நீதிபதிகள் அபய் எஜ். ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”இதுதொடர்பாக தற்போது உத்தரவிட முடியாது. உள்விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் தலையிட முடியாது. தற்போது உத்தரவிட்டால் முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

supreme court rejects plea to register fir yashwant varma
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. புயலை கிளப்பிய விவகாரம்.. யார் இந்த யஷ்வந்த் வர்மா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com