”தேர்தல் அதிகாரி செய்தது மிகப்பெரிய தவறு”-சண்டிகர் மேயர் தேர்தல்முடிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

மேயர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது சட்டத்திற்கு விரோதமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சண்டிகர் மேயர் தேர்தல், உச்ச நீதிமன்றம்
சண்டிகர் மேயர் தேர்தல், உச்ச நீதிமன்றம்ட்விட்டர்

செல்லாத 8 வாக்குகள்

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரின் மாநகராட்சி மேயர் தேர்தலில் 36 மொத்த வாக்குகள் பதிவாகின. சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் I-N-D-I-A கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே 8 வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும், அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார் எனவும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

சண்டிகர் மேயர் தேர்தல்
சண்டிகர் மேயர் தேர்தல்ani

தேர்தல் அதிகாரி தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் நீதிமன்றத்தை அனுகினர். உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” எனத் தெரிவித்தார். மேலும் அவர், “ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் நான் இதனை பார்க்கிறேன். தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளைச் சிதைத்துள்ளார் என்பது அந்த வீடியோவில் வெளிப்படையாகவே தெரிகிறது. அவர் இப்படியா தேர்தலை நடத்துவது? நிச்சயமாக அந்த நபர் விசாரிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

தேர்தல் அதிகாரி பிப்ரவரி 19 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாக மேயர் மனோஜ் சோங்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அத்தகைய சூழலில் மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்த கவுன்சிலர்கள் மற்றும் மனோஜ் சோங்கர்
பாஜகவில் இணைந்த கவுன்சிலர்கள் மற்றும் மனோஜ் சோங்கர்pt web

இந்த இணைவின் மூலம், பாஜக தரப்பில் 17 கவுன்சிலர்கள் இருப்பார்கள். முன்னதாக அவர்களுக்கு 14 பேரே இருந்தனர். ஆம் ஆத்மி 13 கவுன்சிலர்களைக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதன் உறுப்பினர் பலம் 10 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள் எனும் நிலையில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு 17 உறுப்பினர்கள் இருப்பர். சிரோன்மணி அகாலி தளம் உறுப்பினர் பாஜகவிற்கு ஆதரவளிக்கும் சூழலில் பாஜகவின் பலம் 19 ஆக உயர்ந்து பெரும்பான்மையை எட்ட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேயர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கும் மேலாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த தீர்ப்பினை வாசித்தார். அதில் தேர்தல் நடத்திய அதிகாரியின் அறிவிப்பை ரத்து செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பினை வழங்கியுள்ளார். அதாவது, பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மொத்தமுள்ள 36 வாக்குகளில் குறிப்பிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பதிவாகியிருந்த 8 வாக்குகளில் தேர்தல் நடத்திய அதிகாரி எக்ஸ் குறியீடு இட்டதும், சில புள்ளிகள் வைத்ததும் ஏதேதோ எழுதியதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

இதுகுறித்து உச்சநீதிமன்றம் வாசித்த தீர்ப்பில், “தேர்தல் நடத்திய அதிகாரி தனது அதிகார வரம்பியை மீறி நடந்து கொண்டிருக்கிறார் அவர் தனது விதிமுறைகளை மீறி செயல்பட்டு உள்ளார் ஒரு மிகப்பெரிய தவறு அவர் இழைத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரை மேயராக தேர்வு செய்வதற்காக எட்டு வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்திய அதிகாரி வேண்டுமென்றே சிதைத்து இருக்கிறார்.

தேர்தல் நடத்திய அதிகாரி மேயர் தேர்தலில் சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளார் மற்றும் உண்மையை சொல்ல வேண்டிய நீதிமன்றத்தில் பொய்யை கூறி இருக்கிறார்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com