சைக்கிளுக்கு தனிப் பாதை.. மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
”இந்தியாவில் வயிற்றுப்பாட்டுக்கே வழியில்லாமல் ஏராளமான மக்கள் குடிசைகளில் வசிக்கும் நிலையில் நகரங்களில் சைக்கிள்களுக்கு என தனிப்பாதை கேட்பதா” எனக்கூறி அது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தியாவில் அனைத்து நகரங்களிலும் சைக்கிள்கள் செல்ல தனிப்பாதை அமைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ”இந்நாட்டில் ஏராளமான மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி குடிசைகளில் வசிப்பதாகவும் இந்நிலையில் சைக்கிள்களுக்கு தனிப்பாதை அமைப்பது பகல் கனவு” என்றும் தெரிவித்தது. ”உணவு, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கே அரசுகள் முன்னுரிமை தர வேண்டும் என்றும் அதற்கு பிறகே ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற வசதிகளை எதிர்பார்க்கவேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.