“கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது” உச்சநீதிமன்றம்

டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்றம்pt web

மதுபான முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் வெளியே வந்துள்ளார். முன்னதாக இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக்கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்pt web

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்றம்
முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்தில் தாக்கப்பட்டாரா சுவாதி மாலிவால்? டெல்லி காவல்துறையிடம் புகார்

அப்போது, “இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீதிமன்றம் செல்ல முடியாது. டெல்லி லெப்டினண்ட் கவர்னர் இதைப் பார்க்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com