பங்கு சந்தையில் சரிவை கண்ட வணிகம், ஏற்றத்தைக் கண்ட தங்கத்தில் விலை; புதிய உச்சத்தைத் தொட்ட வெள்ளி!

கடந்த சில தினங்களாக ஏற்றத்தை சந்தித்து வந்த பங்கு சந்தையானது, இன்று கனிசமான அளவு இறக்கத்துடன் முடிந்துள்ளது.
தங்கம் மற்றும் பங்கு சந்தை
தங்கம் மற்றும் பங்கு சந்தைபுதியதலைமுறை

கடந்த சில தினங்களாக ஏற்றத்தை சந்தித்து வந்த பங்கு சந்தையானது, இன்று கணிசமான அளவு இறக்கத்துடன் முடிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தேசிய பங்குசந்தையான நிப்டி 2288.15 புள்ளிகளுடன் முடிவடைந்திருந்த நிலையில், இன்று 22762.75 புள்ளிகளுடன் வர்த்தகமானது சரிவில் ஆரம்பித்து, 22704.70 புள்ளிகளுடன் சரிவில் முடிந்தது.

அதே போல் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் நேற்றைய முடிவில் 75170.45 புள்ளிகளுடன் முடிவடைந்திருந்த நிலையில் இன்று காலை 14826.94 புள்ளிகளுடன் ஆரம்பித்து, 74502.90 புள்ளிகள் சரிவுடன் முடைவடைந்துள்ளது. வங்கி, தகவல் தொழில் நுட்பம், கட்டுமான பொருட்களின் பங்குகளும் விலை சரிவை சந்தித்தன.

பங்கு சந்தைகளின் சரிவுக்கு காரணம், தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி முதளீட்டாளார்கள் கவனம் இருப்பதால் பங்குசந்தை இறக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி ஆபரணத்தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 280 உயர்ந்து 54,200க்கு விற்பனையானது.

அதே போல் வெள்ளியின் விலையும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது . இரண்டு மாதங்களில் கிராமிற்கு 21 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் மற்றும் பங்கு சந்தை
தங்கம், வெள்ளி விலை உயர்வு... இனி தொடர்ந்து அதிகரிக்குமா?

வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு 1.20 காசுகள் ஏற்றம் கண்டு, 102.20 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளியின் விலையானது 81/- ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com