நீட் தேர்வை ரத்து செய்ய, பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்ய, பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
நீட் தேர்வை ரத்து செய்ய, பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுக்கவேண்டுமென, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே, நீட் ரத்து செய்ய சட்டம் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக விரைந்து நிறைவேற்ற வேண்டும்" கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "நீட் ரத்து செய்யப்படுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைத்திருப்பது காலந்தாழ்த்தும் செயல்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, "நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கை அமையப்பெற வேண்டும் என்பதே தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. எனவே நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com