டெல்லி | காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து, சோனியா காந்தி நேற்று மாலை நீண்ட காலமாக இருந்து வரும் தீராத இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனவும், டெல்லியில் நிலவி வரும் கடும் காற்று மாசின் காரணமாக அவரது இருமல் பாதிப்பு அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் எனவும் சோனியா காந்தி தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, டிசம்பர் 2025-இல் தனது 79-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஒவ்வாமை காரணமாக அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை நெஞ்சக நோய் நிபுணர் தலைமையிலான மருத்துவர் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

