Loksabha 2024: 'சவால் வாக்கு' என்ற பெயரில் வைரலாகும் போலிச் செய்தி.. உண்மையில் விதிகள் கூறுவதென்ன?

சமூக வலைதளங்களில் ‘சேலஞ்ச் ஓட்’ (challenge vote) எனப்படும் ‘சவால் வாக்கு’ நடைமுறையைக் கோரி, வாக்களிக்கலாம் என்கிற போலிச் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
போலிச் செய்தி
போலிச் செய்திட்விட்டர்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ‘சேலஞ்ச் ஓட்’ (challenge vote) எனப்படும் ‘சவால் வாக்கு’ நடைமுறையைக் கோரி, வாக்களிக்கலாம் என்கிற போலிச் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது, அந்தப் போலிச் செய்தியில் ’வாக்குச் சாவடிக்கு ஓட்டு போடப்போகும் நீங்கள், அங்கு உங்களது பெயர், பட்டியலில் இல்லை என்றால், சட்டப்பிரிவு 49Pவின்படி, நீங்கள் உங்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையையோ காட்டி ‘சவால் வாக்கு’ நடைமுறையைக் கோரி வாக்களிக்கலாம்.

அதேபோல் உங்கள் வாக்கு ஏற்கெனவே போடப்பட்டுள்ளது என்று தேர்தல் அலுவலர்கள் கூறினால், ‘டெண்டர் ஓட்’ என்ற முறைப்படி, நீங்கள் உங்கள் வாக்குரிமையை மீண்டும் பெறலாம். அடுத்து, எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் 14% மேல் வாக்குகள் பதிவானால், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மை அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டெல்லி அரசியலில் பரபரப்பு.. AAP அமைச்சர் திடீர் ராஜினாமா! கட்சியிலிருந்தும் விலகல்.. இதுதான் காரணமா?

போலிச் செய்தி
“cVIGIL புகார் செயலி மூலம் 1.25 லட்சம் புகார்கள் கிடைத்துள்ளன” - இந்திய தேர்தல் ஆணையம்!

ஒருவரின் பெயர் வாக்குப் பட்டியலில் இல்லாதபோது, அவர்களால் வாக்களிக்க முடியாது. 18 வயது நிரம்பிய குடிமக்களின் பெயர்கள் அவர்களின் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகே, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வழங்குகிறது. ஒருவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதால், அவர்கள் நிச்சயமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெறுவது கட்டாயமாகும். அதனால், சவால் வாக்கு என்று குறிப்பிட்டுள்ள நடைமுறையே கிடையாது. மேலும், அதில் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு 49P என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றிப் பேசும் சட்டப்பிரிவே அன்றி, சேலஞ்ச் வாக்குகள் பற்றியானது இல்லை எனப்படுகிறது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவுட்விட்டர்

அதேநேரத்தில், ’’உங்கள் வாக்கு ஏற்கெனவே போடப்பட்டுள்ளது என்று தேர்தல் அலுவலர்கள் கூறினால், ‘டெண்டர் ஓட்’ என்ற முறைப்படி, நீங்கள் உங்கள் வாக்குரிமையை மீண்டும் பெறலாம்’’ என்பது உண்மைதான். தேர்தல் நடத்தை விதிகள், 1961 விதி 42ன்படி, வாக்குச் சாவடி அலுவலர் ஒருவரிடம் வாக்களித்துவிட்டதாகக் கூறினால், உடனடியாக தலைமை அதிகாரியின் கவனத்திற்கு அந்த விஷயத்தைக் கொண்டுசெல்ல வேண்டும். அத்தகைய சந்தர்ப்பத்தில், தலைமை அதிகாரி ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த கேள்விகளைக் கேட்கலாம். டெண்டர் செய்யப்பட்ட வாக்குச் சீட்டு என்பது வாக்குப் பதிவு அலகில் காட்டப்படும் வாக்குச் சீட்டைப் போலவே இருக்கும். அதைத் தவிர, பின்னால் 'டெண்டர்டு பேலட் பேப்பர்' என்ற வாசகத்துடன் ஒப்புதல் அளிக்கப்படும் (முத்திரையிடப்பட்ட அல்லது எழுதப்பட்டதாக).

இறுதியாக, ”எந்த வாக்குச்சாவடியிலும் 14% மேல் வாக்குகள் பதிவானால், அந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்” எனப் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி தவறானது. ஆக, மேற்கண்ட போலிச் செய்திகளை நம்பவேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ”மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது” - எச்சரிக்கை விடுத்த நிர்மலா சீதாராமனின் கணவர்!

போலிச் செய்தி
போலிச் செய்தி விவகாரம்: போலீஸில் புகார்.. கடுமையாக விமர்சித்த சித்தராமையா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com