போலிச் செய்தி விவகாரம்: போலீஸில் புகார்.. கடுமையாக விமர்சித்த சித்தராமையா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா, போலிச் செய்தி தொடர்பாக இன்று (ஏப்ரல் 10) போலீசில் புகார் அளித்துள்ளார்.
சித்தராமையா
சித்தராமையாட்விட்டர்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலும் அங்கு சூடுபிடித்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக (ஏப்.26, மே 7) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தன்னுடைய எக்ஸ் தளத்தில் "எங்களுக்கு இந்துக்கள் தேவையில்லை. முஸ்லிம் ஓட்டுகள் போதும்: சித்தராமையா" என்ற தலைப்பில் கன்னடத்தில் வெளியாகி இருக்கும் செய்திக் கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். இந்தப் போலிச் செய்தி பாஜக - ஜேடிஎஸ் கூட்டணியில் உள்ள குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் பகிரப்பட்டிருப்பதாகவும், அதில் தம்மை இழிவுப்படுத்தும் வகையில் கருத்துகளைச் சேர்த்திருப்பதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் சித்தராமையா, ”போலிச் செய்தியான இது, வகுப்புவாத மோதலைத் தூண்டும் வகையில் உள்ளது. இது, சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படுகிறது. இதுபற்றி ஏற்கெனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இதுபோன்ற பொய்யான செய்திகளை உருவாக்குபவர்களையும், அதற்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் சட்டத்தின் மூலம் வேரறுப்பேன். 10 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ஒரு கட்சி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போலிச் செய்திகளைத் தயாரிக்கும் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக் கூடாது. பொய்யான செய்திகளை நம்புவதற்கும், பகிரும் முன்னும் எச்சரிக்கையாக இருங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: புதிய உச்சம் தொட்டது இந்திய குடும்பங்களின் கடன் மதிப்பு.. குறைந்தது சேமிப்பு.. ஆய்வில் தகவல்!

சித்தராமையா
“கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை ரத்து” - கர்நாடக முதல்வர் சித்தராமையா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com