‘84% இந்திய ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்கள் இப்படித்தான் உள்ளனர்’ - அதிர்ச்சி தந்த ஆய்வு முடிவு!

84 சதவீத இந்தியர்கள் காலையில் கண் விழித்த முதல் 15 நிமிடங்களுக்கு செல்போன் உபயோகிப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றனர்.
ஸ்மார்ட்ஃபோன்
ஸ்மார்ட்ஃபோன் கோப்புப்படம்

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களில் 84% பேர், தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் 15 நிமிடங்களுக்கு செல்போன் உபயோகிப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்காக வயது, பாலினம், வருமானம், வாழும் இடம் மற்றும் நகர பகுதி போன்றவற்றை கணக்கில் கொண்டு 1,100 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். 30 நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

முடிவுகள்

இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அதிகரிப்பால் மனிதர்களின் நடத்தையில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

என்பதும்

பலரும் பொழுதுபோக்கு என்பதை மறந்து எந்தவித பயனும், நோக்கமும் இல்லாமல் முழு நேரமும் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 80 முறையாவது ஸ்மார்ட்போன்களை பார்த்துவிடுகிறார்கள்

என்பதும் தெரியவந்துள்ளது.

செல்ஃபோன் பயன்படுத்தப்படும் விதங்கள்!

50 சதவீதம் பேர் அழைப்புகள் போன்று ஏதேனும் தேவைக்காகவும், தோராயமாக 55 சதவீதம் பேர் தெளிவான நோக்கம் இல்லாமலும் ஸ்மார்ட்போன்களை எடுத்து உபயோகிக்கின்றனர்; 5-10 சதவீதம் பேர் எதற்காக பயன்படுத்துகிறோம் என்று அறியாமலயேவும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகின்றனர்.

பலரும் தங்களின் 31 சதவீதம் நேரத்தினை ஸ்மார்ட்போன் பயன்பாடுகளினால் வீணாக்குகிறார்கள்.

தரவு சொல்வதென்ன?

ஸ்மாட்போன்களுக்கு அடிமையானவர்களின் பட்டியலில் இந்தியா 17 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் உடல் மற்றும் மனநல பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பெற்றோர் குழந்தைகளுக்கிடையே உறவில் விரிசல் ஏற்படுகிறது.

2010 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு நாளைக்கு 2 மணி நேரம் செல்ஃபோன் பயன்படுத்திய இந்தியர்கள், 2023 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.9 மணி நேரம் செல்ஃபோன் பயன்படுத்துகிறார்கள்.

ஸ்மார்ட்ஃபோன்
நாங்கெல்லாம் எலான் மஸ்க்குகே டஃப் கொடுப்போம்..! திருடுபோன சொகுசு காரை ஸ்மார்ட்டாக மீட்ட லண்டன் பெண்!

பெரும்பாலானோர் இணைய பயன்பாட்டின்மூலம் 50-55 % பேர் திரைப்படம், விளையாட்டுப்போட்டிகள், லைவ் வீடியோக்கள், வெப் சீரீஸ், வீடியோ, லைவ் வீடியோக்கள் போன்ற விஷயங்களை பார்க்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு 35 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010 - 2023 ஆம் ஆண்டு வரை 5 மடங்கு இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் ஸ்மார்ட்போன்களின் மலிவான விலையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com