நாங்கெல்லாம் எலான் மஸ்க்குகே டஃப் கொடுப்போம்..! திருடுபோன சொகுசு காரை ஸ்மார்ட்டாக மீட்ட லண்டன் பெண்!

திருடுப்போன தனது சொகுசு காரை ஜீபிஎஸ் இன் உதவி கொண்டு தானே மீட்ட பெண்ணுக்கு மக்கள் மத்தியில் பாராட்டு பெருகி வருகிறது.
அலெக்சாண்ட்ரா விளாட்
அலெக்சாண்ட்ரா விளாட்முகநூல்

திருடுப்போன தனது சொகுசு காரை ஜீபிஎஸ் டிராக்கரின் உதவிக் கொண்டு தானே மீட்ட பெண்ணுக்கு மக்கள் மத்தியில் பாராட்டு பெருகி வருகிறது.

32 வயது நிரம்பிய ருமேனியாவைச் சேர்ந்தவர் அலெக்சாண்ட்ரா விளாட், இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, அலெக்சாண்ட்ராவின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 30,000 பவுண்டு மதிப்புள்ள அவரது Lexus UX என்ற சொகு கார் திருடப்பட்டுள்ளது. இதனை அறிந்த அலெக்சாண்ட்ரா, அருகில் இருந்த காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, எப்படியாவது தனது காரை கண்டறிய வேண்டும் என்ற நினைத்த அவர், tracking app இன் உதவிக்கொண்டு தனது காரை தேடும் பணியில் தானே இறங்கியுள்ளார்.

இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், தனது வீட்டில் இருந்து சுமார் 6 மைல் தொலைவில் கார் இருப்பதை, ஜி.பி.எஸ் டிராக்கரின் மூலம் கண்டறிந்துள்ளார்.

பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் தெரிவிக்கவே, காவல் அதிகாரிகள் ’நீங்களே சென்று காரை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அலட்சியமாக பதிலளித்ததாக அலெக்சாண்ட்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன் கார் இருக்கும் இடத்திற்கு சென்ற அவர், தான் கண்டுபிடித்த காரை தானே மிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அலெக்சாண்ட்ரா தெரிவிக்கையில், “நான், என் கார் கிடைத்துவிட்டது என்று காவல்நிலையத்தில் கூறினேன். ஆனால் அவர்கள் நீங்களே சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக கூறினார்கள். காருக்குள் போதை மருந்தோ அல்லது கொலை செய்யப்பட்ட யாரோ ஒருவரின் சடலமோ இருந்தால் என்னசெய்வது? என்று நினைத்து திறந்துப்பார்த்தேன்.

நல்ல வேலை உள்ளே எதுவும் இல்லை. காரின் உள்ளே எந்த பொருட்களும் இல்லை.பெட்ரோல் எதுவும் மிச்சம் இல்லாமல், டாஷ்போர்டின் விளக்குகள் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. மேலும் திருடர்கள் காரில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியையும் நீக்க முயற்சி செய்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

அலெக்சாண்ட்ரா விளாட்
ஒரு கி.மீ நீளமுள்ள 10,000 ஆண்டு பழமையான கற்கால சுவர் பால்டிக் கடலுக்கடியில் கண்டெடுப்பு!

இந்நிலையில், பெண்ணின் செயலுக்கு பாராட்டுகள் ஒரு புறம் குவிந்து வந்தாலும், ‘காவலர்கள் மீட்டு தரவில்லை, இதனால் எனக்கு பாதுகாப்பு இல்லாதது போல தோன்றுகிறது’ என்று அப்பெண் தெரிவித்துள்ளதும், ஒரு புறம் பேசுப் பொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com