Gold seizedpt desk
இந்தியா
சிங்கப்பூர் டூ பெங்களூரு: விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து பெங்களூருக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானமொன்று இன்று தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Airportpt desk
அப்போது ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை தனியாக அழைத்துச் சென்று, சோதனை நடத்தப்பட்டது. அப்போது உள்ளாடைக்குள் அவர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 55 லட்சம் ரூபாய் என தெரிவித்த அதிகாரிகள், அவரது பெயர், விபரங்களை வெளியிடவில்லை.