சக்தி இசைக்குழு
சக்தி இசைக்குழுமுகநூல்

இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது; ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!

பாடகர் சங்கர் மகாதேவன், திரைப்பட இசையமைப்பாளர் செல்வகணேஷ் உள்ளிட்டோர் கொண்ட சக்தி இசைக்குழுவிற்கு கிராமி (GRAMMY) விருது கிடைத்துள்ளது.

உலகில் இசைத்துறையின் உயர்ந்த விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு சிறந்த ஆல்பம் பிரிவில் விருது கிடைத்துள்ளது. திஸ் மொமென்ட் (THIS MOMENT) என்ற ஆல்பத்திற்காக, சக்தி இசைக்குழு விருது பெற்றுள்ளது.

இக்குழுவில் பிரபல தபலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசைன், பாடகர் சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

சக்தி இசைக்குழு
இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்து - சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் நிலை என்ன?

Shankar Mahadevan, உஸ்தாத் ஜாகீர் ஹுசைனுக்கு 2ஆவது முறையாக கிராமி விருது கிடைத்துள்ளது. விருது வென்றுள்ள செல்வகணேஷ், பிரபல கடம் இசைக்கலைஞர் விக்கு விநாயகராமின் மகன் என்பதும் வெண்ணிலா கபடிக்குழு, குள்ள நரிக்கூட்டம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “இன்று இந்தியாவுக்கு கிராமி மழை பொழிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com