கணவர் கண்ணெதிரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஸ்பெயின் பெண் - நீதி எப்போது கிடைக்குமென எழும் கேள்விகள்!

கடந்தவாரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த பெண்ணிற்கு ரூபாய் 10 லட்சத்தை இழப்பீடாக வழங்கிய ஜார்க்கண்ட் அரசு.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன்
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன்PT

கடந்தவாரம் கணவரின் கண்ணெதிரே ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூபாய் 10 லட்சத்தை இழப்பீடாக வழங்கியது ஜார்க்கண்ட் அரசு.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தம்பதிகளாக ஆசியா முழுவதியும் சுற்றிவர மோட்டார் வண்டியில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர். பல நாடுகளையும் கடந்த இவர்கள் கடந்தவாரம் இந்தியா வந்தனர்.

இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதியில் தங்கியிருந்த இவர்களை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பின் தொடர்ந்து சென்றுள்ளது. அங்கு தனியாக இருந்த தம்பதிகளில் கணவரை அடித்து காயப்படுத்திவிட்டு அப்பெண்னை அக்கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளது. அத்துடன் இல்லாமல் அவர்களின் உடமைகளையும் திருடிக் கொண்டு சென்றுள்ளது.

இது குறித்து அப்பெண் தனது fernanda.4ever என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளானது குறித்தும் எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்தும் அந்தப் பெண்மணி குறிப்பிட்டிருக்கிறார். இதனை அடுத்து உடனடியாக இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன்
பாலியல் வன்முறை... இந்தியாவில் பிரேசிலிய பெண்மணிக்கு நேர்ந்த அவலம்..!

ஸ்பெயின் நாட்டு பெண்ணிற்கு நடந்த இச்சம்பவம் நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என்று பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதியாக ஸ்ரீ சந்திரசேகர், மற்றும் நீதிபதி நவநீத்குமார் ஆகியோர் முண்ணிலையில் விசாரணைக்கு வந்தது. மேலும், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு இழப்பீடாக ஜார்க்கண்ட் அரசு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. இத்தொகையை துணை காவல் ஆணையர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் வழங்கினார்.

வெளிநாட்டை சேர்ந்த பெண்ணிற்கு நடந்த இக்கொடுமையான சம்பவமானது இந்தியாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தாலும், இதற்கான சரியான தீர்வு அத்தம்பதிகளுக்கு கிடைக்கவில்லை என பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை பணம் அல்ல... நீதி தான், நாட்டில் இது போன்ற சம்பவம் மீண்டும் தொடராமல் இருக்க, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தரப்படவேண்டும் என பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com