டெல்லியில் காற்று மாசுani screenshot
இந்தியா
டெல்லியில் மீண்டும் மோசமான காற்று மாசு.. காற்றுத் தரக்குறியீடு 300ஐ தாண்டி அதிர்ச்சி!
டெல்லியில் மீண்டும் காற்றின் தரம் மோசமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
டெல்லியில் லேசான மழைக்குப் பின் காற்று மாசு மீண்டும் மோசமடைந்து, சராசரி காற்றுத் தரக்குறியீடு 310ஐ தாண்டி 'மிக மோசம்' என்ற நிலையை எட்டியுள்ளது.
தலைநகர் டெல்லியில் லேசான மழைக்குப் பின் காற்று மாசு மீண்டும் மோசமடைந்துள்ளது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி, டெல்லியின் சராசரி காற்று தரக்குறியீடு 310ஐ தாண்டி "மிக மோசம்" என்ற பிரிவுக்குச் சென்றுள்ளது.
டெல்லி காற்று மாசுx
குறிப்பாக ரோகிணி மற்றும் பஞ்சாபி பாக் பகுதிகளில் காற்றுத் தரக்குறியீடு 399 வரை பதிவாகியுள்ளது. ஜஹாங்கிர்புரி பகுதியில் காற்று மாசு தீவிர நிலையை எட்டியுள்ளது. இதனால் காலை நேரத்தில் நகரின் பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் மற்றும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
