\
west bengal church attack
west bengal church attackfile photo / ai image

மேற்கு வங்கத்தில் தேவாலயம் மீது தாக்குதல்.. பாதிரியார்கள், பெண்கள் உள்ளிட்டோர் காயம்!

மேற்கு வங்கத்தில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

மேற்கு வங்கத்தில் தேவாலயத் திறப்பு விழாவில் அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் பாதிரியார்கள், பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர். சிலுவை சேதப்படுத்தப்பட்டதுடன், பெண்களின் பாரம்பரிய வளையல்கள் கழற்றச் சொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தேவாலயத்தின் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலில் பாதிரியார்கள், பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், தேவாலயத் திறப்பு விழாவின்போது புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 30 முதல் 35 பேர் கொண்ட கும்பல், தேவாலயத்தில் இருந்த சிலுவையை சேதப்படுத்தப்பட்டதுடன், பெண்களின் பாரம்பரிய வளையல்களைக் கழற்றச் சொல்லி தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. தாக்குதலைப் பதிவு செய்ய முயன்றவர்களின் செல்போன்களும் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

AI Image

மேலும் இந்த இடத்தில் இனி எந்த மத நடவடிக்கைகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் மிரட்டிச்சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கிறிஸ்தவ அமைப்புகள், இது சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளன.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை தொடங்கியிருக்கும் சூழலில், இவ்விவகாரம் குறித்து கூறிய காவல் அதிகாரி ஒருவர் "30 முதல் 35 பேர் கொண்ட குழு தேவாலய வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதாக எங்களுக்குப் புகார் வந்தது. பெண்களும் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் வளாகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு முன்பு, தங்களின் பாரம்பரிய 'ஷாகா'வை (வெள்ளை வளையல்கள்) கழட்டுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது" என்று ஒரு காவல்துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை பிடிஐ-யிடம் தெரிவித்தார்.

west bengal church attack
இஸ்ரேலில் ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி.. எதிர்க்கட்சியுடன் கைக்கோர்க்கும் நெதன்யாகு?