HEADLINES |முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி முதல் செங்கோட்டையனின் நிலைப்பாடு வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் செங்கோட்டையன் நிலைப்பாடு முதல் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி வரை விவரிக்கிறது.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
காகிதத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 விழுக்காடாக உயர்த்தியிருப்பதற்கு தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதால், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய முடிவை பன்னீர்செல்வம், தினகரன் இருவரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 13ஆம் தேதி முதல் திருச்சியில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக, வந்தே பாரத் ரயில்களில் கூடுதலாகப் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால், உருண்டு விழும் பாறைகளால் மீட்புப் பணியில் சிக்கல் எழுந்துள்ளது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.