HEADLINES |இன்று தொடங்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் நீடிக்கும் மழை வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் இன்று தொடங்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் தமிழகத்தில் நீடிக்கப்போகும் மழை வரை விவரிக்கிறது.
தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருநாட்களுக்கு வட தமிழகம் மற்றும் தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக சுகாதாரத் துறை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வோர் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குக் காவல் துறை அனுமதியளித்துள்ளது. வரும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் எனப்படும் ரசாயனம் கலந்த பிள்ளையார் சிலைகளை கடலில் கரைக்க அனுமதித்ததற்காக தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசர அழைப்பின் பேரில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் டெல்லி செல்கின்றனர். உட்கட்சி பிரச்னை, அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
6 கோடி ரூபாய் முன்பணத்தை நடிகர் ரவி மோகன் திருப்பித்தர உத்தரவிட கோரிய வழக்கில், நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதியை அணுக இருதரப்புக்கும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு பிறகு காஸாவை முழுமையாக கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. காஸாவை சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
’’வெள்ள நீரை ஆசீர்வாதமாகக் கருதி வீட்டிலேயே சேமியுங்கள்’’ என்ற பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃபின் கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.