september 17 2025 morning headlines news
eps amit shahx page

HEADLINES |இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் இபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி வரை விவரிக்கிறது.
Published on
Summary

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி வரை விவரிக்கிறது.

  • கரூரில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

  • அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • இன்று 75ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொலைபேசியில் வாழ்த்து கூறியுள்ளார்.

  • பாமக அலுவலகத்தின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி என ஜி.கே.மணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரை சுற்றுப்பயணத்தில் மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.

september 17 2025 morning headlines news
விஜய் pt web
  • தீபாவளி பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கும் நிலையில், இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கப்பட உள்ளது.

  • தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • காஸாவில் இறுதிக்கட்ட தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேலில், இதுவரை சுமார் 65ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

  • ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளது.

  • பாடல்கள் விவகாரத்தில் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் ‘குட் பேட் அக்லி' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

september 17 2025 morning headlines news
அஜித் படத்தில் இளையராஜா பாடல்கள்.. பயன்படுத்த இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com