september 15 2025 morning headlines news
கனமழை, இந்திய அணிஎக்ஸ் தளம்

HEADLINES |கனமழை எச்சரிக்கை முதல் பாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியா வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, செப். 20ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா வரை விவரிக்கிறது.
Published on

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் செப். 20ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா வரை விவரிக்கிறது.

  • சட்டவிரோத குடியேறிகளை காங்கிரஸ் அனுமதித்ததாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • கொள்கையற்ற கூட்டத்தினர் மலிவான அரசியல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்துவைத்தார்.

  • ’ஒற்றைத் தலைமையின் வழிநடப்போம்’ என பாமக மாவட்ட பொதுக்குழுவில் முதல்முறையாக ராமதாஸ் மகள் காந்திமதி அரசியல் உரை நிகழ்த்தினார்.

  • விசிக பிரமுகர்களை கத்தியால் தாக்கிய விவகாரத்தில் புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

september 15 2025 morning headlines news
இளையராஜாபுதிய தலைமுறை
  • ”தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியால் அதிகம் பேச முடியவில்லை” என இளையராஜா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • மேற்கு என்ற பெயரில் அதிநவீன ஏவுகணைகள், விமானங்களை பயன்படுத்தி ரஷ்யா தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளது.

  • ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் சீனாவின் லி ஷிபெங்கிடம் வீழ்ந்தார்.

  • ஆசியக் கோப்பை போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

september 15 2025 morning headlines news
''சிம்பொனியை எழுதுவதற்கு என் வாழ்க்கை முழுவதும் சென்றது'' - இளையராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com