HEADLINES |இளையராஜாவுக்கு பாரத ரத்னா கோரிக்கை முதல் விஜயின் பரப்புரை ரத்து வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை முதல் த.வெ.கவின் பெரம்பலூர் பரப்புரை ரத்து வரை விவரிக்கிறது.
”இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
”சிம்பொனியை எழுதுவதற்கு தன்னுடைய இசை வாழ்க்கை முழுவதும் சென்றுவிட்டது” என தன்னுடைய பாராட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் பெரம்பலூர் பரப்புரையை த.வெ.க. தலைவர் விஜய் ரத்து செய்தார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
”அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒரு மாதத்தில் இணைவார்கள்” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மிஸோரமில் பைரபி - சாய்ரங் இடையேயான புதிய ரயில் பாதையில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், சென்னையில் இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பெண்கள் பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார். 80 கிலோ எடைப் பிரிவில் நுபுர் வெள்ளி பதக்கமும், பூஜா ராணி வெண்கலமும் வென்றனர்.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.