HEADLINES | ஓசூரில் தொடங்கும் முதலீட்டாளர்கள் மாநாடு முதல் விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் ஓசூரில் தொடங்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு முதல் தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்துக்கு காவல் துறை அனுமதி வரை விவரிக்கிறது.
ஓசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
தவெக தலைவர் விஜயின் திருச்சி சுற்றுப்பயணத்துக்கு காவல் துறை 23 நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கியுள்ளது.
அணுசக்தி, சுரங்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்துகேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகளை ஒப்படைக்க போராட்டக்காரர்களுக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
குண்டுவீசி தகர்க்கும் இஸ்ரேலால், உயிரைக் காத்துக்கொள்ள பெட்டி, படுக்கையுடன் காஸா மக்கள் வெளியேறி வருகின்றனர்.
ஆசியக் கோப்பை டி20 போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தை இந்திய அணி எளிதில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு மூன்று பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.