பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி
பாஜக மூத்த தலைவர் அத்வானி Twitter

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் அத்வானி
பாஜக மூத்த தலைவர் அத்வானி

இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் அத்வானி
ராஜஸ்தான்| 1 ரூபாய் பணம்.. 1 தேங்காய் மட்டுமே வரதட்சணை.. பேசுபொருளான இஞ்சினீயர் மணமகன்!

அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "96 வயதான எல்.கே.அத்வானி, மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரியின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த மாதம் 27 ஆம் தேதி அத்வானி உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்த பின் மறுநாளே வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com