ராஜஸ்தான்| 1 ரூபாய் பணம்.. 1 தேங்காய் மட்டுமே வரதட்சணை.. பேசுபொருளான இஞ்சினீயர் மணமகன்!

ராஜஸ்தானில் வெறும் ஒரு ரூபாய் பணத்தையும் ஒரு தேங்காயையும் வாங்கிக்கொண்டு வரதட்சணையே வேண்டாம் என்று கூறி இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன் பேசுபொருளாகி வருகிறது.
model image
model imagex page

வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், நாடு முழுவதும் இன்றும் பல வீடுகளில் வாங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. தவிர, கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் ராஜஸ்தானில் வெறும் ஒரு ரூபாய் பணத்தையும் ஒரு தேங்காயையும் வாங்கிக்கொண்டு வரதட்சணையே வேண்டாம் என்று கூறி இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன் பேசுபொருளாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர். இவர், பொதுப்பணித் துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் அனிதா வர்மா என்ற முதுகலை பட்டம் பெற்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

இதையும் படிக்க: அடுத்த டார்கெட் ரிஷப்.. சாம்சனுக்குதான் வாய்ப்பு.. தீவிர முடிவில் கவுதம் கம்பீர்.. காரணம் இதுதான்!

model image
"வரதட்சணை தராத உனக்கு மூக்கு எதுக்கு" - கோபத்தில் மனைவியின் மூக்கைக் கடித்த உ.பி. கணவர்!

ஜாகரின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சமூக நீதி பிரச்னைகளுக்கு எதிரானவர்களாக திகழ்ந்துள்ளனர். அவர்களை பின்பற்றி ஜாகரும், அனிதா வர்மா குடும்பத்தினரிடம் ஒரு ரூபாய் மற்றும் ஒரு தேங்காய் பெற்றுக்கொண்டு அனிதாவை திருமணம் செய்துள்ளார்.

இதுபற்றி ஜாகர், ”அனிதாவை அவரது பெற்றோர்கள் நன்றாகப் படிக்க வைத்துள்ளனர். அதுவே எனக்கு மிகப்பெரிய சொத்து. எனது மனைவி அரசு வேலையில் சேர முயன்று வருகிறார். அவர், அரசு வேலையில் சேருவதற்கு எனது குடும்பத்தினரும், அவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துவருகிறோம். அவருக்கு அரசு வேலை கிடைக்கும்பட்சத்தில், அவளது சம்பளத்தைச் சில காலத்திற்கு அவரது பெற்றோருக்கே கொடுக்க வேண்டும் என உறுதி அளித்துள்ளேன்” என்றார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க: அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்| ஜோ பைடன் மாற்றமா? கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்!

model image
கேரளா: வரதட்சணை கொடுமையால் நின்றுபோன திருமணம்... மருத்துவக் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com