சித்தராமையாவை நெருங்கிய மர்ம நபர்
சித்தராமையாவை நெருங்கிய மர்ம நபர்pt desk

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நெருங்கிய மர்ம நபர்... பாதுகாப்பு குறைபாடா? – போலீசார் விசாரணை!

பெங்களூரில் மேடையில் அமர்ந்திருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா அருகில் மர்ம நபர் ஒருவர் நெருங்கிச் சென்றார். இதையடுத்து உடனடியாக அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது பாதுகாப்பு குறைபாடா எனவும் கேள்வி எழுந்துள்ளது
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகம் அருகே ஜனநாயக தினம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் மற்றும் அமைச்சர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது போலீசாரின் பாதுகாப்பையும் மீறி, மர்ம நபர் ஒருவர் திடீரென கண்ணிமைக்கு நேரத்தில் மேடையில் ஏறி முதல்வர் அருகே சென்று அவருக்கு சால்வை அணிவிக்கச் சென்றுள்ளார்.

சித்தராமையாவை நெருங்கிய மர்ம நபர்
சித்தராமையாவை நெருங்கிய மர்ம நபர்pt desk

உடனடியாக அதனை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், விரைந்து சென்று அவரை பிடித்து மேடையில் இருந்து அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில், அவர் சித்தராமையாவின் Fan என்பதும், முதல்வரை பாராட்டும் நோக்கில் சால்வை அணிவிக்க வந்ததும் தெரியவந்துள்ளது. அவரது பெயர் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சித்தராமையாவை நெருங்கிய மர்ம நபர்
"தமிழ்நாட்டில் இருப்பதை போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை" - வைகோ

இதையடுத்து கர்நாடகாவில் முதல்வர் நிகழ்ச்சியில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அண்மையில்கூட முதல்வர் சித்தராமையா பங்கேற்ற பிரசாரத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் அவரருகே சென்று மாலை அணிவித்த சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தற்போது மேடையில் இச்சம்பவம் முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பி உள்ளது.

இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை இங்கே காணலாம்:

சித்தராமையாவை நெருங்கிய மர்ம நபர்
இடுப்பில் கை துப்பாக்கியுடன் வந்து முதல்வர் சித்தராமையாவுக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி தொண்டர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com