இடுப்பில் கை துப்பாக்கியுடன் வந்து முதல்வர் சித்தராமையாவுக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி தொண்டர்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, இடுப்பில் கை துப்பாக்கியுடன் வந்து மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியுடன் வந்து முதல்வருக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி தொண்டர்
துப்பாக்கியுடன் வந்து முதல்வருக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி தொண்டர்PT WEB

கர்நாடக மாநிலம், பெங்களூரு சென்ட்ரல் லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக, முதல்வர் சித்தராமையா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பைர சந்திராவில் திறந்த வாகனத்தில், நின்று கொண்டு பொது மக்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

துப்பாக்கியுடன் வந்து, முதல்வருக்கு மாலை அணிவித்த தொண்டர்!

அப்போது கட்சி தொண்டர் ஒருவர், திடீரென முதல்வர் நின்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது ஏறி, முதல்வர் சித்தராமையா மற்றும் வேட்பாளருக்கு மாலை அணிவித்தார். மாலை அணிவித்த, காங்கிரஸ் கட்சி தொண்டரின் இடுப்பில், கை துப்பாக்கி அனைவருக்குத் தெரியும் படி மாட்டியிருந்தது. அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் யாரும் கவனிக்காமல் எப்படி இருந்தார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துப்பாக்கியுடன் வந்து முதல்வருக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி தொண்டர்
ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: மேற்கு வங்கம் விரைந்த தனிப்படை

இது தொடர்பாகத் துப்பாக்கி வைத்திருந்த நபர் பேசிய ரியாஜ், "இதற்கு முன்பு என் மீது தாக்குதல் நடந்தது. அதனால் தான் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளேன். நான் சித்தராமையாவின் தீவிர விசுவாசி" என்றார்.

இந்த சம்பவத்தை விமர்சித்துப் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் ஆர். அசோக், "முதல்வர் சித்தராமையாவை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, மாலை அணிவிக்கச் செல்வது ஏற்புடையது அல்ல. இது பாதுகாப்பு குளறுபடியைக் காட்டுகிறது. தேர்தல் விதிமுறை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம்" என்றார்.

துப்பாக்கியுடன் வந்து முதல்வருக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி தொண்டர்
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com