\
SC Slams High Prices of Essential Cancer Drugs as Daylight Robbery
புற்றுநோய் மருந்துகள்Chatgpt

புற்றுநோய் | “நோயாளிகளுக்கு எதிரான அப்பட்டமான பகல் கொள்ளை” - நீதிபதிகள் அதிருப்தி

புற்றுநோய் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் சந்தையில் பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவது ஏழை நோயாளிகளுக்கு எதிராக நடத்தப்படும் அப்பட்டமான பகல் கொள்ளை என உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. இதுகுறித்த விரிவான தொகுப்பைப் பார்ப்போம்.
Published on

மருந்துகளின் விலை மோசடிகள் குறித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களில், புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும் சில்லறை விற்பனை நடைமுறைகள் குறித்து அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள், விற்பனையாளர்களுக்கு 2,700 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும் புற்றுநோய் மருந்து, நுகர்வோருக்கு அதிகபட்சமாக 27 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதை சுட்டிக்காட்டினர்.

புற்றுநோய் சிகிச்சை
புற்றுநோய் சிகிச்சைAi

புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்கள், தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளையும் நகைகளையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இத்தகைய சூழலில், நோயாளிகளிடம் 10 மடங்கு அதிக பணம் வசூலிப்பது ஏமாற்று வேலை என சாடிய நீதிமன்றம், இதைத் தடுக்கவேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது. உச்ச நீதிமன்றத்தின் கருத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிட்டிருந்த புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டை சேர்ந்த புற்றுநோயாளி ஒருவர், பரிசோதனை மற்றும் தொடக்க நிலை சிகிச்சைகளுக்கே ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 368 ரூபாய் செலவழிப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

SC Slams High Prices of Essential Cancer Drugs as Daylight Robbery
இளைஞர்களைத் தாக்கும் மாரடைப்பு; தப்பிப்பது எப்படி?

மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த பதிலில் தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு 68 ஆயிரத்து 750 பேருக்கும், 2021ஆம் ஆண்டு 76 ஆயிரத்து 968 பேருக்கும், 2022ஆம் ஆண்டு 89 ஆயிரத்து 265 பேருக்கும் புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2023ஆம் ஆண்டு 92 ஆயிரத்து 816 பேருக்கும், 2024ஆம் ஆண்டு 96 ஆயிரத்து 486 பேருக்கும் புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 97 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

SC Slams High Prices of Essential Cancer Drugs as Daylight Robbery
Fatty Liver பாதிப்பும் விழிப்புணர்வும்.. கல்லீரலைப் பாதுகாக்க உதவும் ‘டாப்’ குறிப்புகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com