Fatty Liver பாதிப்பும் விழிப்புணர்வும்.. கல்லீரலைப் பாதுகாக்க உதவும் ‘டாப்’ குறிப்புகள்!
இந்தியாவில் அதிகரித்து வரும் ஃபேட்டி லிவர் குறித்து இந்த கட்டுரை எச்சரிக்கை விடுக்கிறது. கல்லீரலில் 5% மேல் கொழுப்பு சேரும்போது தொடங்கும் இந்த நிலை, வயிற்று அசௌகரியம், சோர்வு போன்ற அறிகுறிகளால் வெளிப்படுகிறது. இன்சுலின் சமநிலையின்மை, வளர்சிதை மாற்றக் கோளாறுகள் முக்கிய காரணங்கள் என மருத்துவர்கள் கூறி, சர்க்கரை இல்லாத பிளாக் காபி, எடை தூக்கும் பயிற்சி, GLP-1 மருந்துகள் உதவக்கூடும் என விளக்குகின்றனர்.
இந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரையும் பாதிக்கக்கூடிய ஒன்றாக, 'ஃபேட்டி லிவர்' (Fatty Liver) எனப்படும் கொழுப்பு கல்லீரல் காணப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன...? இந்த தொகுப்பில் பார்க்கலாம்... PKG மது அருந்தாதவர்களையும் அதிகம் தாக்கும் இந்த பாதிப்பு, நம் கல்லீரலில் 5 சதவீதத்திற்கும் அதிகமான கொழுப்பு சேரும்போது தொடங்குகிறது. வயிற்றுப் பகுதி அசெளகரியம், உடல் சோர்வு போன்ற ஆரம்ப அறிகுறிகள் மூலம் இது வெளிப்படுகிறது.
இன்சுலின் சமநிலையின்மை, வளர்சிதை மாற்றச் சிக்கல்களே இதற்கு முக்கியக் காரணங்களாகும். சமூக வலைத்தளங்களில் பரவும் பல 'ஹேக்ஸ்' முறைகள், இதைத் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், மருத்துவர்கள் இவற்றில் எவை பாதுகாப்பானவை என்று ஆய்வு செய்து மதிப்பீடு செய்துள்ளனர்.அதன்படி, சர்க்கரை கலக்காத Black Coffee குடிப்பது கல்லீரல் வடு, புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக கண்டறிந்துள்ளனர். அதேபோல், எடை தூக்கும் பயிற்சிகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, கல்லீரல் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன
மேலும், மருத்துவரின் பரிந்துரையுடன் பயன்படுத்தப்படும் GLP-1 போன்ற நவீன மருந்துகளும் நல்ல பலனைத் தருகின்றன. அதேநேரம், கல்லீரல் டானிக், டீடாக்ஸ் டீ போன்றவை கொழுப்பைக் குறைக்காது என்றும், மாறாக அவை நீரிழப்பை ஏற்படுத்தி கல்லீரலை மேலும் பாதிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். மேலும், அஸ்வகந்தாபோன்ற மூலிகைகளும் சிலருக்கு கல்லீரல் பாதிப்புகளை உண்டாக்கலாம் எனக் கூறுகின்றனர். எனவே, ஆரோக்கியமான உணவுமுறை, சீரான நீர்ச்சத்து, புரதச் சத்து நிறைந்த உணவு, முறையான உடற்பயிற்சி மட்டுமே கல்லீரலைப் பாதுகாக்க சிறந்த வழிகள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்

