\
SC Says Delhi Gang-Rape Exposes Failure of Law Enforcement
Supreme court ANI

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; அரசின் தோல்வி - உச்ச நீதிமன்றம் காட்டம்!!

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு நிர்பயா நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது. சட்ட அமலாக்கத்தின் அமைப்பு ரீதியான தோல்வியை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம்.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

டெல்லி-என்சிஆர் பகுதியில், பேருந்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது. இந்த சம்பவம், சட்ட அமலாக்கம் மற்றும் பொது நிர்வாகத்தில் உள்ள அமைப்பு ரீதியான தோல்வியை வெளிப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி, கிரேட்டர் நொய்டாவில் இருந்து ஸ்லீப்பர் பேருந்தில் பயணித்த 16 வயது சிறுமியை, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் ,அந்த சிறுமி பழைய டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் அருகே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இரு குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது.

 சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லைfile photo

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த சிறுமி சம்பவம் 2012ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் வேதனையான நினைவுகளை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டது.

பூங்காக்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது இடங்கள் போதிய வெளிச்சம், கண்காணிப்பு மற்றும் நிர்வாக வசதிகள் இல்லாததால் ஆபத்து நிறைந்த பகுதிகளாக மாறுவதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இரங்கலும் ஆதரவும் தெரிவிப்பது மட்டும் போதாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றங்களைத் தடுப்பது, பொது ஒழுங்கைப் பாதுகாப்பது மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பொறுப்பும், கணக்கெடுப்பும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. .

SC Says Delhi Gang-Rape Exposes Failure of Law Enforcement
7 மணி நேர போராட்டம்! 200 அடியில் சிக்கிய பிஞ்சு உயிர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com