காலியான மருத்துவ இடங்கள் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்றம்புதியதலைமுறை

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு... உச்சநீதிமன்றம் ரத்து

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Published on

சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, நீதிபதிகள் ரிஷிகேஷ், சுதான்ஷு, எஸ். வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வு நடத்தி வந்த நிலையில் இன்று இதில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பு
மருத்துவ படிப்புpt web

அதில், “இந்தியாவின் ஒரு குடிமகனாக எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும், கல்வி பயிலவும் உரிமை உள்ளது. இளநிலை படிப்பில் குறிப்பிட்ட அளவில் அந்த மாநிலத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம், ஆனால், முதுநிலை மருத்துவப் படிப்பில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அடிப்படை உரிமையை பறிப்பது ஆகும். அரசமைப்புச் சட்டப் பிரிவு 14- க்கு எதிரானதும்கூட.

காலியான மருத்துவ இடங்கள் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
“எப்படா நடக்கும்னு இருந்திருக்கிறார்கள்” - ’Bad Girl’ மீதான காட்டமான எதிர்வினைகள் - பின்னணி என்ன?

ஆகவே மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவ இடங்களை நீட் தேர்வு தேர்ச்சி கொண்டே நிரப்ப வேண்டும். முன்னதாக செய்யப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்ததாது” என்று உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தென் மாநிலங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

காலியான மருத்துவ இடங்கள் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை | முன்விரோதம் காரணமாக பாக்ஸர் வெட்டிக் கொலை – கதறி அழுத தாய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com